உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்து மாஜி டிரைவர் சாவு

மயங்கி விழுந்து மாஜி டிரைவர் சாவு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடியில் அணு ஆராய்ச்சி மைய ஓய்வு பெற்ற டிரைவர் குளியல் அறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.சென்னை, சோரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம், 61; ஓய்வு பெற்ற கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய டிரைவர். இவர், புதுச்சேரி தட்டாஞ்சாவடி, குண்டுப்பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயசுதா என்பவருடன் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு படுத்தார். காலை குளியல் அறையில் மயங்கி கிடந்தார். அவரை, கதிர்காமம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை