இலவச அரிசி, சர்க்கரை எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
புதுச்சேரி: தீபாவளி பண்டிகைக்கான 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை முத்தியால்பேட்டை தொகுதி மக்களுக்கு வழங்கும் பணி நேற்று துவங்கியது.தொகுதிக்கு உட்பட்ட 14 ரேஷன் கடைகளில் 9 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர் களுக்கு இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கும் பணியை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அந்தந்த பகுதி பஞ்சாயத்தார், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.