உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்காமீஸ்வரர் கோவிலில் இன்று பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் இன்று பவுர்ணமி ஆன்மிக நடைபயணம்

வில்லியனுார், : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் மையமாக கொண்ட பவுர்ணமி ஆன்மிக நடைபயணம் இன்று மாலை துவங்குகிறது.பவுர்ணமி நாளில் வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து ஆன்மிக நடைபயணம் நடந்து வருகிறது. அதன்படி, பவுர்ணமியையொட்டி, வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் இன்று மாலை 6:00 மணியளவில் 24வது பவுர்ணமி ஆன்மிக நடைபயணம் துவங்குகிறது. நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜ பெருமாள் கோவில்களில் வழிபட்டு, அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை விநாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம், வி.தட்டாஞ்சாவடி தேங்காய் சுவாமி சீத்தர் பீடம், வி.மணவெளி, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக சென்று காசிவிஸ்வநாதன் கோவிலில் தரிசனம் செய்கின்றனர். சங்கராபரணி ஆறு மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு சாய்பாபா கோவில், கோட்டைமேடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை