உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.சி.எஸ்., அதிகாரி பதவிகளை நிரப்ப அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

பி.சி.எஸ்., அதிகாரி பதவிகளை நிரப்ப அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

புதுச்சேரி : காலியாக உள்ள பி.சி.எஸ்., அதிகாரிகள் பதவிகளை உடனடியாக நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாச்சலம் அறிக்கை: இந்திய ஆட்சி பணிக்கு (ஐ.ஏ.எஸ்) அடுத்த நிலையில் புதுச்சேரி ஆட்சி பணி (பி.சி.எஸ்) அதிகாரிகள் உள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில், பி.சி.எஸ்., அதிகாரிகள் தான் இணை செயலாளர், துணை செயலாளர்கள், சார்பு செயலாளர்கள், துறை ஆணையர்கள் என பல்வேறு பதவிகளை வகித்து வருகின்றனர். தற்போது 94 பி.சி.எஸ் பதவிகளில் 24 பதவிகள் காலியாக உள்ளன. மேலும், ஓரே அதிகாரி பல துறைகளுக்கு இயக்குனராகவும், இணை, துணை சார்பு செயலாளராகவும் செயல்பட்டு வருகின்றனர். இதனால், துறை சார்ந்த நிர்வாக செயல்பாடுகளில் தேக்கநிலை ஏற்பட்டு, அரசு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, கவர்னர், முதல்வர் ஆகியோர் இப்பிரச்னையில் தலையிட்டு, காலியாக உள்ள பி.சி.எஸ்., அதிகாரி பதவிகளை உடனடியாக நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ