| ADDED : நவ 18, 2025 05:57 AM
புதுச்சேரி: சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் இறந்த இந்தியர்களுக்கு கவர்னர், முதல்வர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். கவர்னர் கைலாஷ்நாதன்: சவுதி அரேபியாவிற்கு ஆன்மிகப் பயணம் சென்ற ஐதராபாத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 42 இந்தியர்கள், பஸ் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். முதல்வர் ரங்கசாமி: சவுதி அரேபியா, மெக்காவிற்கு புனிதப் பயணம் சென்ற இந்தியாவை சேர்ந்த 42 இஸ்லாமியர்கள் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். காங்., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் : சவுதி அரேபியாவில் இந்திய நாட்டைச் சேர்ந்த 42 இஸ்லாமியர்கள் பயணம் செய்த பஸ் மீது டீசல் லாரி மோதி, ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த இச்சம்பவம் என் மனதிலும், காங்., கட்சி மற்றும் இந்திய மக்களின் மனங்களில் அழியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். பாதிக்கபப்ட்டவர்களுக்கு ஆதரவுகள், உதவிகள், உடனடியாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.