உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அசோக்பாபு எம்.எல்.ஏ.,விற்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து

அசோக்பாபு எம்.எல்.ஏ.,விற்கு கவர்னர் தமிழிசை வாழ்த்து

புதுச்சேரி, : டில்லியில் விருது பெற்ற அசோக்பாபு எம்.எல்.ஏ.,வை கவர்னர் தமிழிசை வாழ்த்து தெரிவித்தார்.டில்லியில் சமீபத்தில் நடந்த விழாவில், புதுச்சேரி எம்.எல்.ஏ., அசோக்பாபுவிற்கு, சிறந்த எம்.எல்.ஏ.,விற்கான தாதா சாகேப் பால்கே ஐகான் பிலிம்ஸ் கோல்டு விருது வழங்கப்பட்டது. விருதை, ஓடிசா முன்னாள் பா.ஜ., தலைவர் பசந்தகுமார் பாண்டா எம்.பி., வழங்கி, பாராட்டினார்.இந்நிலையில்,விருது பெற்ற அசோக்பாபு எம்.எல்.ஏ.,வை கவர்னர் தமிழிசை நேரில் அழைத்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ., நிர்வாகி புகழேந்தி உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை