உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நல்லவாடு அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம்

நல்லவாடு அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம்

அரியாங்குப்பம்: நல்லவாடு அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை உற்சவத்தை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு மீனவ கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மயானக் கொள்ளை உற்சவத்தையொட்டி, கடந்த 8ம் தேதி கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, 13ம் தேதி ரணகளிப்பு நிகழ்ச்சியும், முக்கிய விழாவான நேற்று முன்தினம் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம், விழாவை துவக்கி வைத்தார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ