உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குருபூஜை விழா; முதல்வர் வழிபாடு

அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் குருபூஜை விழா; முதல்வர் வழிபாடு

புதுச்சேரி: கோரிமேடு சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி குருபூஜை விழாவில் முதல்வர் ரங்கசாமி சிறப்பு பூஜை செய்துவழிப்பட்டார்.புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலில் நேற்று குருபூஜை விழா நடந்தது. இதில், முதல்வர் ரங்கசாமி சிறப்பு பூஜைகள் செய்து, வழிபட்டார். பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், பாஸ்கர் உட்பட என்.ஆர்., காங்., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.அதே போல், சேலம் சூரமங்கலத்தில் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி ஜீவசமாதி உள்ளது. இங்கு நேற்று நடந்த குருபூஜை விழாவையொட்டி, அப்பா பைத்தியம் சுவாமிக்கு புனிதநீர் வழிபாடு, யாகசாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ., திருமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன், என்.ஆர்., காங்., பிரமுகர்கள் உட்பட பலர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ