உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெண்களை இழிவாக பேசவில்லை: எம்.எல்.ஏ., புகாருக்கு செந்தில் விளக்கம்

 பெண்களை இழிவாக பேசவில்லை: எம்.எல்.ஏ., புகாருக்கு செந்தில் விளக்கம்

புதுச்சேரி: தோல்வி பயத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பொய் புகார் அளித்துள்ளதாக, காலாப்பட்டு தொகுதியில் போட்டியிடவுள்ள செந்தில் பேட்டி அளித்துள்ளார். காலாப்பட்டில் உள்ள கம்பெனிக்குள் நுழைந்து, பெண்களை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் கவர்னரிடம் மனு அளித்தார். பின், அவர் புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்களை திரட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றார். இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் காலாப்பட்டு தொகுதியில் போட்டியிடவுள்ள அர்ஜூனகுமாரி அறக்கட்டளை நிறுவனர் செந்தில், கூறியதாவது: நான் காலாப்பட்டு தொகுதியில் கடந்த 2016 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன். அதன்பின், கடந்த 10 ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கான பணிகளை செய்து வருகிறேன். நான், பொதுமக்களுடன் கம்பெனிக்குள் சென்றது உண்மை. கம்பெனி நிர்வாகத்திடம், தொகுதி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றேன். அவர்களும், விண்ணப்பம் கொடுக்க கூறினர். நான் தருவதாக கூறினேன். எந்த பெண்களையும் இழிவாக பேசவில்லை. மிரட்டவும் இல்லை. அப்போது, எம்.எல்.ஏ.,வின் பாதுகாவலரான ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் வந்து எங்களை வீடியோ எடுத்தார். அதனை தட்டிக் கேட்ட இளைஞர்கள் இருவரை தாக்கினார். இதுதொடர்பாக காலாப்பட்டு போலீசில் புகார் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ., தோல்வி பயத்தில் பொய் கூறி வருகிறார். எங்கள் மீது கம்பெனி நிர்வாகம் எந்த புகாரும் தரவில்லை. பெண்களை தவறாக பேசுவது எம்.எல்.ஏ., தான். நான் பல குற்றங்களை செய்ததாக கூறுகிறார். ஆனால், என்மீது எந்த வழக்கும் கிடையாது. ஆனால், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இவரது பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடாது. அவர் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லை என்றால், அவரைப் பற்றிய பல உண்மைகளை ஆதாரத்துடன் போஸ்டர் அடித்து தொகுதி முழுவதும் ஒட்டுவேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ