மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
9 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
9 minutes ago
குட்கா விற்றவர் கைது
14 minutes ago
புதுச்சேரி: புதுச்சேரி 'ஹேப்பி ஸ்ட்ரீட்' கொண்டாட்டத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை என கவர்னர் தமிழிசை கூறினார்.தெலுங்கானாவில் இருந்து புதுச்சேரி வந்த கவர்னர் தமிழிசையை, பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.பின், அவர், கூறியதாவது;புத்தாண்டில் புதுச்சேரி வளர்ச்சி அபரிதமாக இருக்கும். மத்திய அரசின் திட்டங்களுக்கு அதிக உதவிகள் கிடைத்துள்ளது.மத்திய அரசு நிதி சரியாக தருவதில்லை என்று தி.மு.க., குற்றம்சாட்டி உள்ளது. புதிய வருடத்தில் எதுவும் சொல்ல வேண்டாம் என நினைத்தேன். மோதல் போக்கிலேயே நிதி கேட்பது சரியாக இருக்காது.யாரையும் வஞ்சிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இருக்காது.தி.மு.க., மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, பல பேரிடர்கள் ஏற்பட்டது. அப்போதைய மத்திய குழு, பேரிடர் முடிந்து பல நாட்கள் கழித்து வருவர். ஆனால் தற்போது உடனே மத்திய குழு வந்து மழை சேதத்தை பார்வையிட்டுள்ளது.பேரிடரின்போது மாநில அரசுக்கும் கடமை உள்ளது. ஆனால், மத்திய அரசு முற்றிலுமாக கைவிட்டுவிட்டது. வட மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள் என கூறுவது சரியல்ல. எல்லா வகையிலும் வளர்ச்சி அடைந்த நாடாக மத்திய அரசு முன்னேற்றுகிறது.ரேஷன் கடைகளில் வரிசையாக நிற்க வைத்து நிவாரணம் தருவதை விட அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்துவது தான் அன்புடன் நடத்தும் செயல்.கர்நாடகா, தெலுங்கானாவில் வங்கி கணக்கில் தான் பணம் செலுத்துகின்றனர்.புத்தாண்டு கொண்டாட்டத்தில் 4 மாணவர்கள் கடலில் மூழ்கி இறந்தது, கொலை சம்பவம் தொடர்பாக டி.ஜி.பி.யிடம் விசாரிக்க உள்ளேன். கடற்கரை பாதுகாப்பை பலப்படுத்த தெரிவித்துள்ளேன்.ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை. கொண்டாட்டங்கள் அனைத்துக்கும் வரைமுறை தேவை. ஹேப்பி ஸ்ட்ரீட் தொடர்பாக அரசிடமும், டி.ஜி.பி.,யிடம் கேட்கிறேன். கொண்டாட்டம் அளவுமீறி திண்டாட்டமாகவும் மாறிவிடக்கூடாது.கவர்னருக்கும், முதல்வருக்கும் நட்புணர்வு இருந்தால் மக்களுக்கு பலன் தரும். கருத்து வேறுபாடு மோதலாக இருக்கக்கூடாது.இவ்வாறு அவர், கூறினார்.
9 minutes ago
9 minutes ago
14 minutes ago