உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஐடியல் அட்ஸ், ஈவன்ட்ஸ் நிறுவன சேல்ஸ் எக்ஸ்போ 2024 துவக்கம்

ஐடியல் அட்ஸ், ஈவன்ட்ஸ் நிறுவன சேல்ஸ் எக்ஸ்போ 2024 துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் ஐடியல் அட்ஸ் மற்றும் ஈவன்ட்ஸ் நிறுவனம் சார்பில் மார்ச் வருடாந்திரா சேல்ஸ் எக்ஸ்போ 2024 நேற்று துவங்கி வரும் 18 ம் தேதி வரை நடக்கிறது. எக்ஸ்போவை சத்யா ஏஜென்சீஸ் பொது மேலாளர் சீத்தாராமன் துவக்கி வைத்தார். ஐடியல் அட்ஸ் மற்றும் ஈவன்ட்ஸ் நிறுவன மேலாண் இயக்குனர் பிரபு வரவேற்றார். இதில் புதுச்சேரி நுகர்வோர் பொருட்கள் மொத்த விற்பனையாளர்கள் சங்கம் தலைவர் அய்யப்பன், நாகா லிமிடெட் பிராண்ட் மார்கெட்டிங் மேலாளர் சோனியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எக்ஸ்போ குறித்து உரிமையாளர் கூறியதாவது:விழாக்கால சிறப்பு சலுகையாக 50 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. இதில் ரெக்கீளினர் செட், மாடர்ன் சோபா, இம்போர்டட் சோபா, மசாஜ் சேர், டைனிங் செட், பெட்ரூம் செட், அவுட்டோர் பர்னீச்சர் உள்ளிட்ட பர்னீச்சர் வகைகள், வீட்டு உபயோக பொருட்கள், முன்னனி பிராண்ட் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி, மொபைல் போன்கள், மைக்ரோ ஓவன், ஹோம் தியேட்டர், பெண்களுக்கான அழகிய பேக்குகள் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் மளிகை பொருட்கள், ஜவுளி ரகங்கள், கிச்சன் அப்ளையன்ஸ் இடம் பெற்றுள்ளன.அனைத்தும் தவனை முறையில் வாங்க லோன் வசதியும் செய்து தரப்படுகிறது. எக்ஸ்போவில் சத்யா நிறுவனம் வழங்கும் ஸ்மார்ட் போன் வாங்கினால பட்டர்பிளை கிச்சன் செட் இலவசம், ரூ. 1 செலுத்தினால் இ.எம்.ஐ.,யில் ஏசி வழங்கப்படுகிறது, எந்த பிராண்ட் 5 ஸ்டார் ஏசி வாங்கினால் நான்கு சேர்கள், 3 ஸ்டார் ஏசி வாங்கினால் இரண்டு சேர்கள் இலவசமாக வழங்கப் படுகிறது. மேலும் விழாக்கால சிறப்பு சலுகையாக எக்ஸ்போ விளம்பரத்தை கொண்டு வந்து கொடுத்து ரூ. 250 செலுத்தினால், ரூ. 500 மதிப்புள்ள நாகா மற்றும் எலைட் மளிகை பொருட்களை பெற்று செல்லலாம். அனுமதி இலவசம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை