உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாங்க் ஆப் பரோடாவின் 8,218வது கிளை சூளகிரியில் துவக்கம்

பாங்க் ஆப் பரோடாவின் 8,218வது கிளை சூளகிரியில் துவக்கம்

புதுச்சேரி, : பாங்க் ஆப் பரோடா வின் புதிய கிளை, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் நேற்று துவக்கியது.இந்தியாவின் முன்னோடி வங்கியான, பாங்க் ஆப் பரோடா, நகரம் மட்டுமின்றி, கிராமங்களிலும் தனது கிளைகளை தொடர்ந்து விரிவு படுத்தி வருகிறது. மேலும், சுய உதவிக்குழுக்களுக்கு, கடனுதவியை வழங்கி, தொழில் அபிவிருத்திக்கு கை கொடுத்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி பிராந்தியம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில், 8,218 வது, கிளையை நேற்று துவக்கியது. இந்த கிளையை, ஐ.வி.டி.பி., நிறுவனர் குழந்தை பிரான்சிஸ் துவக்கி வைத்து, சிறப்புரை நிகழ்த்தினார்.பாங்க் ஆப் பரோடா வங்கியின் சிறப்புகள், சேமிப்பு மற்றும் கடனுதவி திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. சுய உதவிக்குழு மகளிர் எழுப்பிய, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.விழாவில், ரூ.13.59 கோடிக்கான சுய உதவிக் குழு கடன் வழங்கப்பட்டன. கடனுதவி பெற்றவர்கள், வங்கி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.இதில், வங்கி சென்னை மண்டல தலைவர் சரவணகுமார், புதுச்சேரி பிராந்திய தலைவர் கமலக்கண்ணன் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி