மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
8 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
8 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
8 hour(s) ago
வில்லியனுார்: உறுவையாறு கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் திறந்து வைத்தார்.மங்கலம் தொகுதி, உறுவையாறு கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் டேங்க் பகுதியில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், ரூ. 22 லட்சம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.இதன் திறப்பு விழா நடந்தது. வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் தனது சொந்த செலவில் உறுவையாறு கிராமத்தை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ஒரு குடிநீர் கேன் வழங்கினார். வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் உட்பட பலர் உடனிருந்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago