| ADDED : பிப் 03, 2024 07:35 AM
புதுச்சேரி : பா.ஜ., அலுவலகத்தில் கிராமங்கள் தோறும் செல்லும் இயக்கம் துவக்கப்பட்டது.பிரதமர் மோடி 10 ஆண்டுகால சாதனைகள், மக்கள் நலத் திட்டங்களை, கிராமங்கள் தோறும் கொண்டு செல்லும் இயக்கத்திற்கான தேசிய பயிற்சி முகாம் பா.ஜ., தேசியத் தலைவர் நட்டா தலைமையில் நடந்தது.புதுச்சேரியில், பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி வழிகாட்டுதலின்படி கட்சி அலுவலகத்தில் மாநில பயிற்சி முகாம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக கிராமங்கள் தோறும் செல்லும் இயக்கம் துவக்க விழா நடந்தது. மாநில பொறுப்பாளர் வெற்றிச்செல்வம் தலைமை தாங்கினார். இணை அமைப்பாளர் சுரேஷ் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், மவுலிதேவன் நோக்கவுரையாற்றினர். பா.ஜ.,தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மத்திய அரசின் திட்டங்கள், அதனால் பயனடைந்த பயனாளிகள் பற்றி விளக்கினார்.உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்புரையாற்றினார். தேசிய தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி சீனிவாஸ், புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரவீன்குமார் ஆகியோர் கிராமங்கள் தோறும் செல்லும் இயக்கம் குறித்து காணொலி மூலம் விளக்கினர். எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், அசோக்பாபு, மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இணை அமைப்பாளர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.