மேலும் செய்திகள்
லாஸ்பேட்டை வித்யா கணபதி கோவில் கும்பாபிேஷகம்
43 minutes ago
உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு பாராட்டு
2 hour(s) ago
கஞ்சா விற்ற வாலிபர் கைது
2 hour(s) ago
ஹேல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
2 hour(s) ago
புதுச்சேரி:பட்ஜெட்டில் மானிய கோரிக்கையின்போது அமைச்சர் ராஜவேலு வெளியிட்டுள்ள அறிவிப்பு: தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை பகுதிகளில் தலா 120 மாணவர்கள் தங்கும் வகையில் 2 அதிநவீன ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதிகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள விடுதிகள் அனைத்திலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், புதிதாக படிக்கும் அறை, நூலகம், கணினி வசதி, புதிய கட்டில் , மெத்தை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெண்களின் சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உரிய விதிமுறையின் படி விண்ணப்பிக்கும் 250 நபர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்களுக்கு தலா அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை மானியமும், 50 நபர்கள் மின்சார ஆட்டோ வாங்க தலா அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை மானியமும் வழங்கப்படும். மேலும், பாட்கோ மூலம் ஓட்டுநர் பயிற்சி பெற பயிற்சி கட்டணமும், உரிமம் பெறுவதற்கான கட்டணமும் வழங்கப்படும். அம்பேத்கர் பஞ்சரத்னத் தலங்கள் யாத்திரைத் திட்டத்தின் பயனை அதிகமான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பெறும் வகையில், பயனாளிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 65 வயதிலிருந்து 70 வயதாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுநாள் வரை அபிஷேகப்பாக்கத்தில் மட்டுமே செயல் பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்கள் 5 கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் இவ்வாண்டு தொடங்கப்படும். பயிற்சி பெரும் மாணவர்களுக்கு ஊக்கதொகையாக வழங்கப்பட்டு வந்த 1500 ருபாய் 3500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
43 minutes ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago