உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாவட்ட தேர்தல் அதிகாரி சோதனை சாவடியில் ஆய்வு

மாவட்ட தேர்தல் அதிகாரி சோதனை சாவடியில் ஆய்வு

பாகூர், : லோக்சபா தேர்தலை முன்னிட்டு மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் நேற்றிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.புதுச்சேரி லோக்சபா தேர்தல் முன்னிட்டு நன்னடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது. அதையடுத்து, மாநில எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் மற்றும் பறக்கும் படைகள் மூலமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் குலோத்துங்கன் நேற்றிரவு பறக்கும்படை அதிகாரிகளுடன் தவளக்குப்பம், முள்ளோடை, சோரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.சோரியாங்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியை பார்வையிட்டு, கண்காணிக்க ஏற்ற வகையில் இல்லாததால் மாற்று இடத்தில் அமைக்க வலியுறுத்தினார்.பின்னர், அங்கிருந்த வாகன சோதனைப் பதிவேட்டை பார்வையிட்டு, சோதனைச் சாவடிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை மற்றும் வருகை, பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் தொடர் ஆய்வுகளின் விபரம் குறித்து கேட்டறிந்தார்.மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் சோதனைச் சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி