உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூதாட்டியிடம் நகை பறிப்பு; வாலிபர்களுக்கு வலை

மூதாட்டியிடம் நகை பறிப்பு; வாலிபர்களுக்கு வலை

நெட்டப்பாக்கம் : கல்மண்டபத்தில் மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகி்றனர்.கல்மண்டபம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, 85. இவர் நேற்று காலை 9:00 மணியளவில் வீட்டின் எதிரில் உள்ள இரும்பு கேட்டினை சுத்தம் செய்தார். அப்போது கூட்ரோடு திசையில் இருந்து பைக்கில் வந்த இரு வாலிபர்களில் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு, தப்பிச் சென்றனர்.அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த வாலிபர்களை பிடிக்க விரட்டிச் சென்றனர். அதற்குள் வாலிபர்கள் மாயமானார்கள். இதுகுறித்த புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் சப்இன்ஸ்பெக்டர் (பொ) ராஜசேகர் வழக்குப் பதிந்து, தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை