உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மூதாட்டியிடம் நகை திருட்டு 

 மூதாட்டியிடம் நகை திருட்டு 

புதுச்சேரி: திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு, தென்னஞ்சாலை வீதியை சேர்ந்தவர் சம்பந்தம் மனைவி மலர்க்கொடி, 67. இவர் தனது கணவருடன் கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து வழக்கு விசாரணைக்காக மதுராந்தகம் கோர்ட்டிற்கு செல்ல, தனியார் பஸ்சில் புதுச்சேரி வந்தார். ராஜிவ் சதுக்கம் வந்த இருவரும், திண்டிவனம் செல்ல பஸ்சிற்காக காத்திருந்தனர். அப்போது, மலர்க்கொடி கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் தங்க செயினை திருடு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து டி நகர் போலீசில் புகார் அளித்தார். அதில், சோரப்பட்டில் இருந்து பஸ்சில் வந்தபோது, கதிர்காமம் அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் ஏறிய சில பெண்கள் தன்னை சூழ்ந்து நின்றதாகவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மூதாட்டியிடம் நகை திருடிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை