| ADDED : ஜன 01, 2026 05:38 AM
திருபுவனை: புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி என்.சி.சி., தரைப்படை பிரிவு மாணவி சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார். மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக்கல்லுாரியில் பி.காம்., ௨ம் ஆண்டு படித்து வரும், மாணவி ஆர்த்தி மற்றும் அதே கல்லுாரியில் பி.சி.ஏ., இரண் டாம் ஆண்டு படித்து வரும் மாணவி லோகேஸ்வரி ஆகிய இருவரும் கல்லுாரியில் என்.சி.சி., தரைப்படை பிரிவில் உள்ளனர். இருவரும், மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தேர்ச்சிபெற்று, கடந்த 28 மற்றும் 29ம் தேதிகளில் மத்தியபிரதேசம், போபாலில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் மாணவி ஆர்த்தி தேர்ச்சி பெற்று சர்வதேச அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மாணவி லோகேஸ்வரி தேசிய அளவிலான போட்டியில் தேர்ச்சி பெற்று, ஜனவரி மாதம் இரண்டாம் கட்டமாக நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். தேசிய போட்டியில் சாதனை புரிந்த மாணவிகளை புதுச்சேரி என்.சி.சி., தலைமையக குரூப் கமாண்டர் கர்னல் ஏ.கே மொஹந்தி, கல்லுாரி முதல்வர் கனகவேல், என்.சி.சி., அலுவலர் கதிர்வேல் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.