மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
15 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
15 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
15 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
15 hour(s) ago
காரைக்கால், : புதுச்சேரி அரசு வெளியிட்ட காலண்டரில் காரைக்கால் அம்மையார் கோவில் படம் இல்லாததற்கு நாஜிம் எம்.எல்.ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை;காரைக்கால் மாவட்டத்தில், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா காரைக்காலில் கொண்டாடப்படுகிறது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.இதனிடையே புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், புதிதாக வெளியிடப்பட்ட 2024ம் ஆண்டு காலண்டரில் காரைக்கால் அம்மையார் கோவில் படம் இடம் பெறவில்லை.அதற்கு பதில், புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில் படம் இடம் பெற்றுள்ளது. அம்மையார் கோவில் திருவிழா என்றால் மாங்கனித் திருவிழா என, அனைவருக்கும் தெரிந்தது.அதிகாரிகள் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு கண்டனத்திற்குரியது. வரும் காலத்தில் இதுபோல் தவறு நடக்காமல் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago