உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் நபரிடம் ரூ. 42 லட்சம் மோசடி

காரைக்கால் நபரிடம் ரூ. 42 லட்சம் மோசடி

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால், கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன், 48. இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், இவரது 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, தகவல் வந்தது. அதை நம்பி மர்ம நபர் பரிந்துரைத்த பங்குகளில் பல தவணையாக 42.24 லட்சம் ரூபாயை சுப்ரமணியன் முதலீடு செய்தார்.ஆனால் முதலீடு செய்த பணத்திற்கான லாபம் மற்றும் செலுத்திய பணம் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்ரமணியன், எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை