ஹரியானாவில் கலை நிகழ்ச்சி காரைக்கால் மாணவர்கள் பங்கேற்பு
காரைக்கால் : ஹரியானா மாநிலத்தில் நடந்த கலை நிகழ்ச்சியில் காரைக்கால் மாணவர்கள் பங்கேற்றனர். அகில இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையேயான இளைஞர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் ஹரியானா மாநிலத்தில் குருஷேத்ரா பல்கலைக்கழகத்தில் நடந்தது. நாடு முழுதும் 25 மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அந்தந்த மாநிலத்திற்குள் உள்ள கலாச்சாரங்கள், உணவு பழக்க வழக்கங்கள், விளையாட்டு சிறப்புகளை பாடல்கள், நடனம் மூலம் தெரிவித்தனர். இதில், புதுச்சேரி மாநிலம் சார்பில், காரைக்காலை சேர்ந்த 25 மாணவர்கள் நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப் பாளர் தாமோதரன், சமுதாய நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் ஆகியோர் தலைமையில் பங்கேற்ற னர். அவர்களை கலை நிகழ்ச்சியை ஹரியானா மாநில இளைஞர்கள் மற்றும் வளர்ச்சி அமைச்சர் சந்திப் சிங் பாராட்டினார்.