உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெங்களூரு தொழில்நுட்ப கண்காட்சியில் காரைக்கால் மாணவர்கள் பங்கேற்பு

பெங்களூரு தொழில்நுட்ப கண்காட்சியில் காரைக்கால் மாணவர்கள் பங்கேற்பு

காரைக்கால் : காரைக்கால் அரசு தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவியர், பெங்களூரு தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்றனர். காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லுாரி மாணவியர் மற்றும் காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவியர் இணைந்து, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தின், 'ஓபன் டே' அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை சமீபத்தில், காண சென்றனர். அங்கு, முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி சதீஷ்குமார் வரவேற்று, ஜெர்மனி நாட்டின் நவீன உயர் ஆராய்ச்சி கருவிகளின், அறிவியல் தொழில் நுட்பங்களை திட்ட வேலைக்கு பயன்படுத்துவது பற்றி விளக்கினார். இதையடுத்து, இந்திய அறிவியல் நிறுவனத்தின் மிக முக்கிய அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளான, விண்வெளி பொறியியல், வளி மண்டல அறிவியல், கடல் சார் அறிவியல், கிரையோஜெனிக் டெக்னாலஜி, புவி அறிவியல், வானியல், உயர் ஆற்றல் இயற்பியல், செயற்கை நுண்ணறிவு பொறியியல், ரோபோடிக்ஸ் டெக்னாலஜி, நானோ அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின், நவீன ஆய்வகங்களை, மாணவ மாணவியர் பார்வையிட்டனர். இதில், அரசு மகளிர் தொழில் நுட்ப கல்லுாரி விரிவுரையாளர்கள் விமலன், ராஜபாலன், ஆய்வக பயிற்றுவிப்பாளர் சங்கீதா மற்றும் காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சதீஷ்குமார் ஆகியோர் மாணவர்களுடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ