மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
வானூர் : புதுச்சேரி-திண்டிவனம் மெயின் ரோடு, திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கே.சி.எம்., மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது.புதுச்சேரி கவர்னர் தமிழிசை, மருத்துவமனையை திறந்து வைத்து, சிகிச்சை மையத்தை பார்வையிட்டார். விழாவில் உறவினர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், வணிக நிறுவன நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த மருத்துவமனையின் சிறப்பு அம்சங்கள் குறித்து டாக்டர் மணிகண்டன் கூறுகையில், 'மருத்துவமனையில் எலும்பு மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்காக 24 மணி நேர எலும்பு முறிவு சிகிச்சை, புறநோயாளிகள் நல சிகிச்சை, அறுவை சிகிச்சை அரங்கம், ரத்தப் பரிசோதனை நிலையம், எக்ஸ்ரே, ஆர்த்ரோஸ்கோபி, மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை கூடங்கள் உள்ளன.தண்டுவட அறுவை சிகிச்சை, எலும்பு நகர்வு எதிர் சிகிச்சை, எலும்பு புற்றுநோய் சிகிச்சைகள், நீரிழிவு தடுப்பு, உணவு முறை ஆலேசனை வழங்கப்படுகிறது. எடை இழப்பு, மனஅழுத்த மேலாண்மை, ரத்த சர்க்கரை குறைவு, இன்சுலின் மேலாண்மை, நீரிழிவு இருதய நோய், கர்ப்பிணிகளுக்கான சர்க்கரை நோய் சிகிச்சை, குழந்தைகளின் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது' என்றார்.விழாவிற்கு வந்தவர்களை, மணிகண்டன் டிம்பர், பிளைவுட்ஸ் மற்றும் கே.சி.எம்., கணபதி சேஷ மகால் உரிமையாளர் குமாரசாமி, சந்திரா குமாரசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் சலவாதி ஜெயகிருஷ்ணன், கம்சலா ஜெயகிருஷ்ணன், டாக்டர்கள் மணிகண்டன், சரண்யா ஆகியோர் வரவேற்று, நன்றி தெரிவித்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago