உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லலிதாம்பிகை கோவிலில் 11ம் தேதி கும்பாபிேஷகம்

லலிதாம்பிகை கோவிலில் 11ம் தேதி கும்பாபிேஷகம்

புதுச்சேரி: குருமாம்பட்டு யோக மாயா லலிதாம்பிகை கோவிலில், வரும் 11ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது.புதுச்சேரி, குருமாம்பட்டு, இந்திரா நகரில், யோக மாயா லலிதாம்பிகை கோவில் உள்ளது. கோவிலில் திருப்பணிகள் முடிந்து, மகா கும்பாபி ேஷகம் நாளை மறுநாள் 11ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, நாளை காலை விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கி, மாலை 4:30 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜைகள் நடக்கிறது.11ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை கோவில் விமானத்தில், புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.அன்று இரவு, கோவிலில் உள் பிரகாரத்தில் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. கும்பாபிேஷக ஏற்பாடுகளை, கோவில் யோகி லிலிதா மஹா மேரு டிரஸ்ட் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை