உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்துமாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

முத்துமாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

அரியாங்குப்பம்: சின்ன வீராம்பட்டினம் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது. அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் முத்து மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக விழா தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் வேள்வி பூஜை நடந்தது. நிலத்தேர் வழிபாடு, கலையீர்ப்பு சடங்கு வழிபாடு நடந்தது. நேற்று இரண்டாம் வேள்வி பூஜை, தொடர்ந்து, சூரிய பூஜை, ஞானதிருமஞ்சனம், தத்துவப் பூஜை, தொடர்ந்து மூன்றாம் வேள்வி பூஜை நடந்தது. இன்று 21ம் தேதி காலை 7:30 மணிக்கு நான்காம் வேள்வி பூஜை நடக்கிறது.காலை 9:30 மணி முதல் 10:30 மணிக்குள் கோவில், விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்