| ADDED : மார் 02, 2024 06:19 AM
புதுச்சேரி : ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.வானுார் கழும்பெரும்பாக்கம், மாத்துார் காலனி, மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 52; கூலித்தொழிலாளி. கடந்த 27 ம் தேதி ஏழுமலையை, மாத்துார் காலனி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஸ்கூட்டரில் பின்னால் அமர வைத்து வேலைக்கு அழைத்து வந்தார்.கொழுவேரி சாலையில், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி சென்றார். சுவாமி விவேகானந்தா கல்லுாரி எதிரே வந்தபோது, சாலையில் குறுக்கே வந்த கால்நடை மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்தார். அப்போது ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்திருந்த ஏழுமலை கிழே விழுந்ததில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஏழுமலை சிகிச்சை பலனின்றி இறந்தார். வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.