| ADDED : ஜன 24, 2024 04:26 AM
புதுச்சேரி : கலால் துறை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:நாளை 25ம் தேதி வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு, கலால் துறை ஆணையர் ஆணைப்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுபான கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.