உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குறையாத காய்கறிகள் விலை நடுத்தர மக்கள் வேதனை

குறையாத காய்கறிகள் விலை நடுத்தர மக்கள் வேதனை

புதுச்சேரி: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காய்கறிகள் விலை மீண்டும் உயர துவங்கி உள்ளது.தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வெங்காய் தக்காளி விலைகள் உயர்ந்து இருந்தது. கடந்த வாரம் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை குறைந்த வெங்காயம் தக்காளி விலை மீண்டும் உயர துவங்கி விட்டது. சாதாரண சில்லரை கடைகளில் வெங்காயம் கிலோ ரூ. 60 முதல் 70 வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ரூ. 55க்கும், உருளை கிலோ ரூ. 50முதல் 60க்கும் விற்பனையானது.அவரை ரூ. 110, பீட்ரோட் ரூ. 50, பாகற்காய் ரூ. 60, பீன்ஸ் ரூ. 120, கத்திரிக்காய் ரூ. 70, முட்டைகோஸ் ரூ. 37, கேரட் ரூ. 70, பச்சை மிளகாய் ரூ. 75, சவ்சவ் ரூ. 45, பிடிகரணை ரூ. 90, கரணை ரூ. 80, முருங்கைக்காய் ரூ. 90, மங்காய் ரூ. 60, இஞ்சி ரூ. 90, முள்ளங்கி ரூ. 40, பீக்கங்காய் ரூ. 70க்கு. தேங்காய் ரூ. 25 முதல் ரூ. 30 வரையிலும், சம்பார் வெங்காயம் ரூ. 90க்கும், பூண்டு பல மாதங்களாக கிலோ ரூ. 400 இல் இருந்து குறையாமல் விற்பனையாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை