உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகிளா காங்., ஆலோசனைக் கூட்டம்

மகிளா காங்., ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி : புதுச்சேரி மகிளா காங்., சார்பில் ஆலோசனைக் கூட்டம் லாஸ்பேட்டை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.மகிளா காங்., தலைவி பஞ்சகாந்தி, லாஸ்பேட்டை தொகுதி காங்., நிர்வாகி ரமா வைத்தியநாதன் தலைமை தாங்கினர். லாஸ்பேட்டை தொகுதி மகிளா காங்., நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ரமா வைத்தியநாதன் பேசுகையில், 'மத்திய அரசு பொதுமக்களின் அன்றாட தேவைகளான சமையல் எண்ணெய், காஸ், உணவு தானியங்கள், மளிகை பொருட்கள் போன்ற பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த வேண்டும்.ஆண்களை போன்று பெண்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். சமுதாயத்தில் பெண்கள் அடிப்படை சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதில், பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பஞ்சாயத்து அளவில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசின் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை