கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
புதுச்சேரி: பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது மூலக்குளம் பகுதியில் ஒருவர் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு விரைந்தது சென்றனர். அவர், போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் உழவர்கரை, மாதாகோவில் தெருவை சேர்ந்த சிராக், 19, என்பது தெரிய வந்தது. இதையடுத்து சிராக்கை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர்.