மண்டல பூஜை துவக்கம்
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டல பூஜை நேற்று துவங்கியது. மண்ணாடிப்பட்டு தொகுதி, காட்டேரிக்குப்பம் புதுநகரில் சித்தி விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் காலை 8:45 மணிக்கு விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தொடர்ந்து, 48 நாள் மண்டல பூஜை நேற்று துவங்கியது. அதையொட்டி, செல்வ விநாயகர் மற்றும் சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.