உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி வடக்கு, மேற்கு அணிகள் வெற்றி

மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி வடக்கு, மேற்கு அணிகள் வெற்றி

புதுச்சேரி: புதுச்சேரியில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரி வடக்கு மற்றும் மேற்கு அணிகள் வெற்றி பெற்றன.கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் புதுச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் இணைந்து நடத்தும், புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான, 'மாஸ்டர்ஸ் பத்து ஓவர்' கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று காலை 9:15 மணிக்கு நடந்த போட்டியில், புதுச்சேரி வடக்கு மற்றும் ஏனாம் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஏனாம் அணி 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. வடக்கு அணியின் நாராயணன் 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய வடக்கு அணி 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வடக்கு அணியின் நாராயணன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.காலை 11:45 மணிக்கு நடந்த போட்டியில் புதுச்சேரி தெற்கு மற்றும் காரைக்கால் அணிகள் மோதின. முதலில் ஆடிய புதுச்சேரி தெற்கு அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 82 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மதன் 49 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய காரைக்கால் அணியும் 10 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 82 ரன்கள் அடித்ததால், ஆட்டம் 'டை'யில் முடிந்தது. தெற்கு அணியின் இளங்கோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவர், ஆட்டநாயகன் விருது பெற்றார்.மதியம் 2:15 மணிக்கு நடந்த போட்டியில் புதுச்சேரி மேற்கு மற்றும் மாகி அணிகள் மோதின. முதலில் ஆடிய மேற்கு அணி, 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 110 ரன்கள் குவித்தது. மேற்கு அணியின் ராஜா 29 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய மாகி அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்து, 6 ரன்களில் தோல்வியை தழுவியது. மாகி அணியின் சஜூ சோட்டன் 36 ரன்கள் எடுத்தார். ராஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ