மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
4 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
4 hour(s) ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் எம்.பி.ஏ., மாணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி முத்தியால்பேட்டை, வ.உ.சி., நகர், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம். காப்பீட்டு நிறுவன அலுவலர். இவரது மனைவி கெஜலட்சுமி அரசு வங்கி ஊழியர். இவர்களின் மூத்த மகன் அபிலாஷ், 24; புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.எம்.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகன் பிளஸ் 1 படிக்கிறார்.நேற்று முன்தினம் காலை ராஜாராம் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டனர். தேர்வு இருப்பதால் மகன் அபிலாஷ் வீட்டிலேயே படித்து கொண்டிருந்தார். பாட்டி மங்கலட்சுமி உடன் இருந்தார்.பணிக்கு சென்ற கணவன் மனைவி இருவரும் மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு பணிக்கு திரும்புவதிற்கு முன்பு அபிலாஷ் குறித்து விசாரித்தனர். அப்போது பகல் 12:00 மணிக்கு, வீட்டின் 2வது மாடி அறைக்கு சென்று படித்து கொண்டிருப்பதாக பாட்டி மங்கலட்சுமி தெரிவித்தார்.மாலை 5:30 மணிக்கு வீட்டிற்கு வந்த கெஜலட்சுமி கதவை தட்டியும் அபிலாஷ் திறக்காததால், கணவருக்கு தகவல் தெரிவித்து வரவைத்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அபிலாஷ் மின் விசிறியில் துாக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தேர்வு பயம் காரணமாக அபிலாஷ் தற்கொலை செய்த கொண்டாரா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago