உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரியப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மெகா சைஸ் பள்ளத்தால் தொடரும் விபத்து

ஆரியப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மெகா சைஸ் பள்ளத்தால் தொடரும் விபத்து

வில்லியனுார் : வில்லியனுார் ஆரியப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் மெயின்ரோட்டில் உள்ள மெகா சைஸ் பள்ளத்தால் விபத்துக்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.புதுச்சேரி-விழுப்புரம் இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது வில்லியனுார் சங்கராபரணி ஆற்று பாலம்.தற்போது சங்கராபரணி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டி வருகின்றனர்.இந்நிலையில் விழுப்புரம் மெயின்ரோடு வில்லியனுார் பைபாஸ் கண்ணகி பள்ளி ரவுண்டான துவங்கி விசாலமான சாலையில் வெகமாக செல்லும் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் ஆரியப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள பள்ளத்தில் இறங்குவதால் திடீர் விபத்துகள் ஏற்படுகிறது.நேற்று முன்தினம் இந்த சாலையில் பைக்கில் கை குழுந்தையுடன் சென்றவர்கள் மெகா சைஸ் பள்ளத்தில் குழுந்தையுடன் விழுந்தனர். அப்போது பின்னால் கனரக வாகனங்கள் வராததால் பைக்கில் சென்ற மூவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது போன்று தொடர்ந்து இந்த இடத்தில் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆரியப்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள இந்த மெகா சைஸ் பள்ளத்தை பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ