புதுச்சேரி: எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அரசு சார்பில், முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே போல், அ.தி.மு.க., வினர் மரியாதை செலுத்தினர்.எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி, அரசு சார்பில், புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், அவை தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அங்கிருந்து, ஊர்வலமாக சுப்பையா சாலை, காந்தி வீதி, புஸ்சி வீதி வழியாக புதிய பஸ் நிலையம் வந்து எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாராமன், இணை செயலாளர் கணேசன், மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரிமணிகண்டன் தலைமையில், எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா முத்தியால்பேட்டை சின்ன மணிக்கூண்டு அருகே கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாநில இணை செயலாளர் காசிநாதன், துணை தலைவர் நந்தன், தொகுதி செயலாளர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.ஒ.பி.எஸ்., அணியின் செயலாளர் ஓம்சக்திசேகர் தலைமையில் லெனின் வீதி கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாடினர்.பின், பஸ் நிலையம் எதிரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.