உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக்கில் வைத்திருந்த பணம், போன் மாயம்

பைக்கில் வைத்திருந்த பணம், போன் மாயம்

காரைக்கால்: காரைக்காலில் பைக்கில் வைத்திருந்த 60 ஆயிரம் பணம் மற்றும் மொபைல் போன் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காரைக்கால், கோட்டுச்சேரி, வரிச்சிக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன், 61; பொதுப்பணித்துறை இளநிலை கணக்கு அதிகாரியாக பணிபுரிந்து ஒய்வு பெற்றார். தற்போது மத்திய அரசின் சர்வ சிக் ஷா அபியான திட்ட ஆலோசகராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் கனரா வங்கியில் இருந்து 60 ஆயிரம் பணத்தை எடுத்தார். பணம் மற்றும் தனது மொபைல் போனை ஒரு மஞ்சல் பையில் வைத்து, தனது எலெக்ட்ரிக் பைக்கில் வைத்தார். பின், மாதா கோவில் வீதியில் உள்ள கடையில் தாமோதரன் தனது நண்பருடன் சென்று, டீ குடித்து விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது பணம், போன் வைத்திருந்த மஞ்சல் பையை காணவில்லை. இதுக்குறித்த புகாரின் பேரில், நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை