மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
5 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
5 hour(s) ago
புதுச்சேரி : புதுச்சேரி அரசு, கலை பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும், 'இசை நாட்டிய விழா, சிறுவர் இசை நாட்டிய விழா, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா' கடற்கரை சாலை, அம்பேத்கர் மணி மண்டபம் எதிரில், நேற்று மாலை துவங்கியது. விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், உதயம் நாட்டியாலயா குழுவின் பரதமும், அவுட் லாஸ்டர்ஸ் டான்ஸ் ஸ்கூல் அகாடமியின் நாட்டுப்புற நடனமும், கிருஷ்ணா இசை குழுவின் கருவி இசை நிகழ்ச்சியும் நடந்தது. முன்னதாக, குமார் குழுவினரின் தவில், நாதஸ்வரம் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, பரதம், மெல்லிசை, கரகம், காவடி, நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் முதல் கட்ட விழா, வரும், 20ம், தேதி வரை, மொத்தம் 6 நாட்களுக்கு நடக்கிறது. இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக, நாடக விழா, முருங்கப்பாக்கம், திரவுபதி அம்மன் கோவில் திடலில் வரும், 21ம் தேதியில் இருந்து, 27 ம் தேதி வரை மொத்தம், 7 நாட்களுக்கு நடக்க உள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago