உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்

 முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை, நெசவாளர் நகர் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணியினை முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து பூஜை செய்து துவக்கி வைத்தார். லாஸ்பேட்டை தொகுதி, நெசவாளர் நகரில் அமைந்துள்ள செல்வகணபதி, முத்துமாரியம்மன், பாலமுருகன் கோவிலில், பரிவார மூர்த்திகளுக்கு சன்னதி, உற்சவர் மண் டபம் மற்றும் விழா மண்டபம் அமைப்பதற்கான திருப்பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. பணியினை, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில், கோவில் நிர்வாகத்தினர், திருப்பணி குழுவினர், நெசவாளர் நகர் பொது மக்கள், தொகுதி என்.ஆர்.காங்., நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை