உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உற்சவர் மண்டபம் நன்னீராட்டு விழா

செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் உற்சவர் மண்டபம் நன்னீராட்டு விழா

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், உற்சவர் மண்டபம் நன்னீராட்டு விழா நடந்தது அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில், உள்பிரகாரத்தில் உள்ள வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர் பரிவார உற்சவர் மண்டபம் புதிதாக கட்டப்பட்டது. மண்டபத்தின் நன்னீராட்டு விழா நேற்று காலை நடந்தது. அதனையொட்டி கணபதி பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை நடந்தது. தொடர்ந்து 10:30 மணியளவில், உற்சவர் மண்டபத்தில் புனிதநீர் ஊற்றி, நன்னீராட்டு விழா நடந்தது. பின்னர், உற்சவர் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. வழக்கறிஞர் ருத்ரகுமாரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பாஸ்கர் எம்.எல்.ஏ., கோவில் தனி அதிகாரி அமுல் என்கிற கமலஜோதி உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியை தொடர்ந்து, கந்த சஷ்டி விழா, நாளை மறுநாள், 22ம் தேதி துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி