உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமுதாய கல்லுாரியில் தேசிய பயிலரங்கம்

சமுதாய கல்லுாரியில் தேசிய பயிலரங்கம்

புதுச்சேரி, : புதுச்சேரி பல்கலைக் கழக சமுதாயக்கல்லுாரி, ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், 'இளைஞர்களின் நலவாழ்வுக்கான நுட்பங்கள் குறித்த மூன்று நாள் தேசிய பயிலரங்கம்' நேற்று துவங்கியது.கருத்தரங்க கூடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவிப்பேராசிரியர் அர்ச்சுணன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் பாரதி நோக்கவுரையாற்றினார்.புதுச்சேரி அரசு செயலாளர் ஆஷிஷ் மாதவராவ் மோரே கருத்தரங்கினை துவக்கி வைத்தார். ராஜிவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு நிறுவன புலத் தலைவர் வசந்தி ராஜேந்திரன், புதுவைப் பல்கலைக்கழக மேலாண்மை துறை தலைவி மாலபிகா டியோ ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மூன்று நாள் தேசியக் கருத்தரங்கில் பல்வேறு கல்லுாரிகளைச் சார்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறை உதவிப் பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர். உதவிப் பேராசிரியர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி