உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்கம்பங்கள் அகற்றாமல் சாலைப்பணி பொதுப்பணித்துறை அலட்சியம்

மின்கம்பங்கள் அகற்றாமல் சாலைப்பணி பொதுப்பணித்துறை அலட்சியம்

திருக்கனுார் : சந்தை புதுக்குப்பத்தில் சாலை நடுவே உள்ள மின் கம்பங்களை அகற்றாமல், சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு தொகுதி சந்தை புதுக்குப்பம் கிராம மெயின் ரோட்டில், பொதுப்பணித்துறை மூலம் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சாலையின் ஒருபுறம் அகலப்படுத்தப்பட்டு 'ப' வடிவ கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சாலை அகலப்படுத்தப்பட்ட பகுதியில், சாலையின் நடுவே உள்ள 4 மின்கம்பங்கள் அகற்றப்படாமல் பொதுப்பணித்துறை மூலம், தார்சாலைக்கும், புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் வாய்க்காலுக்கும் இடையே சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.சாலை நடுவே உள்ள மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்படாமல், சாலை அமைக்கப்படுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓடிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.எனவே, சந்தை புதுக்குப்பம் மெயின் ரோட்டில் சாலை நடுவே உள்ள மின்கம்பங்களை விபத்து ஏற்படும் முன் மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ