உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடலில் தொடரும் உயிர் பலியை கண்டித்து நேரு எம்.எல்.ஏ., முற்றுகை போராட்டம்

கடலில் தொடரும் உயிர் பலியை கண்டித்து நேரு எம்.எல்.ஏ., முற்றுகை போராட்டம்

புதுச்சேரி : கடலில் மூழ்கி சுற்றுலா பயணிகள் உயிரிழப்பதை தடுக்க தவறியதாக கூறி, சுற்றுலாத்துறை இயக்குநர் அலுவலகத்தை நேரு எம்.எல்.ஏ., முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த வால்பாறை பகுதியை சேர்ந்த 9 நண்பர்களில் மூவர் நேற்று முன்தினம் கடலில் குளித்தனர். அதில், இரண்டு வாலிபர்கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு இறந்தனர்.இதுபோல, புத்தாண்டு அன்று 4 மாணவ மாணவிகள் கடலில் குளித்தபோது, கடலுக்குள் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேரு எம்.எல்.ஏ., நேற்று காலை, உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள சுற்றுலாத்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.அப்போது, 'கடந்த 3 ஆண்டிற்கு முன் கடற்கரை வரும் சுற்றுலா பயணிகள் கடலில் மூழ்கினால், உடனடியாக காப்பாற்ற நியமிக்கப்பட்ட பாதுகாப்பு குழுவினருக்கு சம்பளம் வழங்காததால் பணியில் இருந்து நின்று விட்டனர். தற்போது ஏராளமான உயிரிழப்புகள் கடலில் நடப்பதால், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு போட முடியவில்லை என்றால், கடற்கரையில் வேலி அமைத்து சுற்றுலா பயணிகள் உயிர்களை காப்பாற்ற வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாஜலபதி, ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக சுற்றுலாத்துறை இயக்குநர் (பொறுப்பு) தமிழ்செல்வன் பேச்சுவார்த்தை நடத்தி, உயிரிழப்புகள் ஏதும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ