உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி வகுப்பறைக்கு புதிய கட்டடம்; ரூ. 59.97 லட்சத்தில் பணி துவக்கம்

பள்ளி வகுப்பறைக்கு புதிய கட்டடம்; ரூ. 59.97 லட்சத்தில் பணி துவக்கம்

அரியாங்குப்பம் : வீராம்பட்டிணம் சிங்காரவேலர் உயர்நிலைப் பள்ளியில் ரூ. 59.97 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணியை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.வீராம்பட்டிணம் சிங்காரவேலர் உயர்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி, பள்ளி சார்பில் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.அதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை மூலம் ரூ. 59.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணியை நேற்று பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் சுப்பராயன், கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டட உதவிப்பொறியாளர் விக்டோரியா, இளநிலைப் பொறியாளர் ஜெயமாறன்ராஜ் உட்பட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், என்.ஆர்., காங்., பிரமுகர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி