UPDATED : ஆக 20, 2026 05:32 PM | ADDED : ஆக 20, 2026 05:31 PM
வில்லியனுார்: மங்கலம் தொகுதி மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மை ரவிக்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார். மங்கலம் தொகுதி மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள தேனீ நகர், பாலமுருகன் நகர் மற்றும் பெருமாள் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக மின்னழுத்தக் குறைபாடு இருந்தது. இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ.,வும், முதல்வருமான ரங்கசாமியிடம் அப்பகுதி மக்கள் மின் தேவையைப் பூர்த்தி செய்து கொடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து கிராமத்தில் புதிய மின்சார டிரான்ஸ்பார்ம் அமைத்துத் கொடுக்குமாறு மின்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை ஏற்று மின்துறை சார்பில் ரூ.13 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய 200 கே.வி.ஏ. மின்சார டிரான்ஸ்பார்மை அமைத்தனர். முதலமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தலின் படி, வில்லியனுார் தொகுதி எம்.எல்.ஏ., ரவிகுமார் கலந்துகொண்டு, புதிய மின் டிரான்ஸ்பார்மரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்துறை செயற்பொறியாளர் உமேஷ் சந்திரா, இளநிலைப் பொறியாளர் போனேஷ்வரன், முன்னாள் சேர்மன்கள் பாலமுருகன், ரேவதிபர்குணன், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.