மேலும் செய்திகள்
ஆன்லைன் லாட்டரி விற்பனை; ஒருவர் கைது
20-Nov-2024
கிணற்றில் விழுந்த மாடு மீட்புசேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த கூட்டாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி தமிழரசன். இவரது பசு மாட்டினை மேய்ச்சலுக்கு விட்ட போது அங்குள்ள செப்டிக் டேங்கிற்காக தோண்டிய உறைகிணற்றில் விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு வீரர்கள் வந்து, பசுமாட்டினை பத்திரமாக மீட்டனர்.செயின் பறித்த 3 பேர் கைதுவிழுப்புரம்: கன்னியம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர், 50; இவர், கடந்த 19ம் தேதி மயிலத்தில் இருந்து இரவு 7.00 மணிக்கு திண்டிவனத்திற்கு பஸ்சில் வந்தார். சென்னை பஸ் ஏறுவதற்காக சாலையோரம் வந்த அவரை, 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி, ஒரு சவரன் தங்க செயினை பறித்துச் சென்றனர். புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் விசாரித்து, செயின் பறிப்பில் ஈடுபட்ட திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியை சேர்ந்த அருண், 30; பிரித்திவிராஜ், 48; தென்றல் நகர் சசிக்குமார், 49; ஆகியோரை நேற்று கைது செய்தனர்.ஷெட் அமைக்க எதிர்ப்புகடலுார்: கடலுார் அடுத்த கோண்டூர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து, பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக ஒன்றிய நிர்வாகம் சார்பில் கோண்டூரில் ஷெட் அமைக்கும் பணி நேற்று நடந்தது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, அப்பகுதி மக்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணிகளை தடுத்து நிறுத்தினர். சிறுமி திருமணம்: ஒருவர் கைது பண்ருட்டி: பண்ருட்டி அருகே கீழ் வடகுத்து கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பாக்கியசந்திரன், 34; என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியான இவருக்கு, 14 வயது சிறுமியை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து சிறுமி முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தியதில் அந்த சிறுமியின் தாய் கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பாக்கியசந்திரன், 34; அவரது தந்தை ராஜேந்திரன் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து பாக்கியசந்திரனை கைது செய்தனர்.'சி விஜில்' ஒத்திகைகடலுார்: கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதத்தில் பல்வேறு பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்படும். இதில் 'சி விஜில்' பாதுகாப்பு ஒத்திகை, நேற்று காலை துவங்கி இன்று இரவு வரை நடக்கிறது. இந்த ஒத்திகையில், நேற்று மாலை 4.00 மணியளவில் கடலுார் முதுநகர் மணிக்கூண்டு அருகே ஊடுருவ முயன்ற பாதுகாப்பு வீரர்கள் ஆறு பேரை, கடலுார் முதுநகர் போலீசார் மடக்கிப்பிடித்தனர். கஞ்சா கடத்தியவர் கைதுவிழுப்புரம்: பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், நேற்று மதியம் 1.00 மணிக்கு மன்னார்சாமி பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் வாகனத்தில் வைத்திருந்த 1.300 கிலோ கஞ்சாவை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். விசாரணையில், புதுச்சேரி, லாஸ்பேட்டை, நரிக்குறவர் காலனியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரகாஷ்,23; என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
20-Nov-2024