உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போதை பொருள் இல்லாத இந்தியா அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

 போதை பொருள் இல்லாத இந்தியா அதிகாரிகள் உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரி: போதை பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர். மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில், 'நஷா முக்த் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ், போதைப் பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க, அதிகாரிகள் நேற்று உறுதிமொழி ஏற்றனர். தலைமை செயலகத்தின் தலைமைச் செயலர் சரத்சவுகான் தலைமையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போதைப் பொருள் இல்லா இந்தியாவை உருவாக்க என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வோம் என, உறுதிமொழி ஏற்றனர். இதேபோன்று கலெக் டர் அலுவலகத்தில் துணை கலெக்டர் சிவசங்கரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு பிரசார உறுதிமொழி ஏற்றனர். அரசு செயலர்கள் மற் றும் தலைமை செயலக அனைத்து ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி