உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மக்களை திரட்டி போராட்டம் ஓம்சக்தி சேகர் அறிவிப்பு

மக்களை திரட்டி போராட்டம் ஓம்சக்தி சேகர் அறிவிப்பு

புதுச்சேரி: 'பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களை தனி தேர்வர்களாக வெளியே அனுப்ப கூடாது' ஓ.பி.எஸ்., அணி செயலாளர் ஓம்சக்தி சேகர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:சமீபகாலமாக, சில பள்ளிகளில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்களை மட்டும் வைத்துக் கொண்டு, சராசரி மாணவர்களை தனி தேர்வர்களாக மாற்றி அனுப்புவது அதிகரித்துள்ளது. இதுபோல செய்து வெற்றி பெறுவது உண்மையான 100 சதவீத தேர்ச்சி கிடையாது.புதுச்சேரி கல்வித் துறை உடனடியாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஐந்தாம் வகுப்பு முதல் தொடர்ந்து படிக்கும் மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.மாணவர்கள் நலம் சார்ந்த இந்த விஷயத்தில் முதல்வர் ரங்கசாமி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்களை திரட்டி சம்பந்தப்பட்ட பள்ளிகள் முன் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை