மேலும் செய்திகள்
பைக் திருட்டு
1 minutes ago
பிஜி., கமிஷனர், மியான்மர் துாதருடன் அமைச்சர் ஆலோசனை
3 minutes ago
அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
4 minutes ago
காரைக்கால்: காரைக்காலில் பைக்குகள் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது. காரைக்கால், சுப்ராயர் தெருவை சேர்ந்தவர் பழனியப்பன், 45. இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில் நிரவி விழிதியூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த விழிதியூர் காமராஜர் தெரு, கருப்பையா,40, என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. காயமடைந்த பழனியப்பன், கருப்பையா ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் கருப்பையா இறந்தார். விபத்து குறித்து விசாரித்த திருப்பட்டினம் போக்குரவரத்து போலீசார், கருப்பையா குடிபோதையில் விபத்து ஏற்படுத்தி இறந்துவிட்டதாக வழக்குப் பதிந்தனர். அதனை அறிந்த அவரது உறவினர்கள் நேற்று, மருந்துவமனை அருகில் வழக்கறிஞர் பொன்முருகன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி., முருகையன் மற்றும் போலீசார் பேச்சவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.
1 minutes ago
3 minutes ago
4 minutes ago