உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பட்டியலின மக்களுக்கு ஒதுக்கிய நிதி முழுமையாக செலவு செய்ய உத்தரவு

பட்டியலின மக்களுக்கு ஒதுக்கிய நிதி முழுமையாக செலவு செய்ய உத்தரவு

புதுச்சேரி : பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை முழுமையாக இந்த நிதியாண்டிற்குள் செலவு செய்ய வேண்டும் என, சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார்.புதுச்சேரி அரசின் பட்ஜெட்டில் பட்டியலின மக்களுக்காக அரசு துறைகளில் ஒதுக்கப்படுகின்ற நிதி மற்றும் அதன் செலவினங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், அசோக்பாபு, ராமலிங்கம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் கேசவன், துறை இயக்குனர் இளங்கோவன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் துறைவாரியாக பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதி செலவினங்களுக்காக என்ன என்ன திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும், பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை முழுமையாக இந்த நிதியாண்டிற்குள் செலவு செய்ய வேண்டும். அதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என, சபாநாயகர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை